1. Home
  2. தமிழ்நாடு

எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் உயர்வு..!

1

இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான எச்-1பி,எல்-1 மற்றும் ஈபி-5 போன்ற பல்வேறு வகை குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

எச்-1பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். புதிய எச்-1பி விண்ணப்ப விசா கட்டணம், படிவம் I-129, 460 டாலரில் இருந்து 780 டாலர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எச்-1பி பதிவு கட்டணம் 10 டாலரில் இருந்து 215 டாலராக ஆக உயரும். இது மட்டும் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 460 டாலரில் இருந்து 1,385 டாலர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் விசாக்கள் என்று பிரபலமாக அறியப்படும் ஈபி-5 விசாக்கள் 3,675 டாலரில் இருந்து 11,160 டாலராக உயர்த்தப்படுவதாக அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like