தமிழகம் முழுவதும் எச்.ராஜா சுற்றுப்பயணம்..!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜாவின் சுற்றுப்பயண விவரம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்திட, கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். சுற்றுப்பயணம் இனிதே நடந்திட அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.