1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் எச்.ராஜா..!

Q

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் வாக்குச்சாவடி குழு அமைப்பு, தேர்தல் அறிக்கை தயாிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என்று தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த குழுவில் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், மக்களவை தேர்தலுக்காக தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டோகால், அலுவலக நிர்வாகம், வாகனம், வீடியோ வேன் செயல்பாடு ஆகியவற்றுக்காக 38 குழுக்களையும் அமைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like