செந்தில் பாலாஜியை கலாய்க்கும் ஹெச்.ராஜா..!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நீதிபதி பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என 3 வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உறுதி செய்தார். அமலாக்கத்துறை சட்டப்படி தான் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. இனிமேலாவது திராவிடியன் ஸ்டாக் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். கைதி நம்பர் 1440 உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்ட வேண்டும். இன்னமும் தமிழக அரசு நாடகமாடுமானால் அது தமிழக அரசுக்கும் காவேரி மருத்துவமனைக்கும் ஆபத்தாக முடியும். கைதி நம்பர் 1440 காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் ஒரு மருத்துவமனையை அது புதிதாக வாங்கியுள்ளதாம். அதன் பெயர் என்ன. தெரிந்தவர்கள் கூறவும். 40 நாட்களாக ஒரு குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்து தமிழக அரசு தோல்வி. தமிழகத்திற்கு தலைகுனிவு இன்று” என விமர்சித்துள்ளார்.