இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!

இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.,19) இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
யார் இந்த ஞானேஷ் குமார்?
* அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
* கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார். மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றி உள்ளார்.
* கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.