1. Home
  2. தமிழ்நாடு

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் நியமனம்..!

1

ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் நாட்டின் 25-வது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 2022ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இன்று பிப்ரவரி 18ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.

இந்நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை நடத்திட வேண்டி அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது குறித்து நேற்று மோடி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.

இதில் லோக்சபா எதிர்கட்சிதலைவரும் காங். எம்.பி.யுமான ராகுல்,. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராம் அர்ஜூன் மெக்வால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இதற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.

தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் நியமிக்கப்பட்டதாக பிரதமர் மோடி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.புதிய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஸ்குமார் பிப்.,19 அன்று பதவியேற்கிறார்.

Trending News

Latest News

You May Like