#BREAKING : கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு - விஜய்..!
தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திராவிட இயக்கம் தெருவெங்கும் வளர்ந்ததே சினிமா மூலம் தான் - த.வெ.க. விஜய்
உழைப்பு மட்டும் தான் என்னோடது, அதற்கு காரணமான எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் - த.வெ.க. விஜய்
திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள்
யார் பேரையும் சொல்லி தாக்குவதற்கு வரவில்லை
திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுகிறார்கள்
பெரியார் அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் தான் எங்களின் அரசியல் எதிரி.
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் என தவெக கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பிய விஜய், ‘பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை, இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என கூறிய விஜய் Extra Luggage-ஆக நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக இருந்து உழைப்பதே என் Target. ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்"
பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள், மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான் என்று விஜய் தெரிவித்தார்.
இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது அந்த கலரை பூசுவது என என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது. இனிமேல் உங்களை எதிர்பவர்களுக்கு இந்த கலரை பூசுவது, அந்த கலரை பூசுவது என மோடி மஸ்தான் வேலை செய்தாலும், TVKக்கு எந்த சாயத்தையும் பூச முடியாது, திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழகத்தின் இரண்டு கண்கள்.
திராவிடம் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். பெரியாரின் கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்றார்.