குரு பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!
80 களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'குரு' என்ற படத்திலும் 'யாகாவராயினும் நாகாக்க' என்ற தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டதால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (76) நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் இந்தி, பெங்காலி, உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழப்பட்டது குறிப்பிடத்தக்கது.