சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ்..!!
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 12 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 6.0 புள்ளி பெற்று சம நிலையில் இருந்தனர்.
நேற்று 13வது சுற்று நடந்தது. குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்தடுத்து குகேஷ் தடுமாறினார். முடிவில் 68 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. தற்போது இருவரும் 6.5 புள்ளியுடன் உள்ளனர்.
இன்று கடைசி, 14வது சுற்று நடந்தது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதில், போட்டி 'டிரா'வில் முடியும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பிறகு சிறப்பாக விளையாடிய குகேஷ், 58வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பட்டம் வென்ற குகேஷூக்கு பாராட்டு குவிந்து வருகிறது.