1. Home
  2. தமிழ்நாடு

குஜராத் விமான விபத்து ; 110 பேர் பலி? அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு..!

Q

242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787 -8 டிரீம் லைனர் என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 குழு நபர்கள் இருந்தனர். மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்ட இந்த விமானமானது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள கிராமத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனடியாக தீயணைப்பு மீட்பு குழுவினர், 90 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 
விபத்துக்குள்ளான விமானத்தில் 11 சிறார், 2 கைக்குழந்தைகள் பயணம்..
குஜராத் அவசர உதவிக்கு : 9821414954
இதற்கிடையே குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like