1. Home
  2. தமிழ்நாடு

35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி..!

1

நேற்று நடந்த 59 ஆவது லீக் போட்டியில் CSK – GT அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றிகரமாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தர். நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் அணி தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர்.  பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த கில் 50 பந்துகளில் சதமடித்தார். மறுபுறம் சாய் சுதர்சனும்   50 பந்துகளில்  சதமடித்து அசத்தினார்.

GT vs CSK

தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  பின்னர் 55 பந்துகளில் 104 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார். இறுதியில் குஜராத் அணி 20  ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் துஷார் தேஸ்பாண்டே  2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ரகானே தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் கை கோர்த்த டேரில் மிட்செல் - மொயீன் அலி இருவரும் அதிரடியில் மிரட்டினர். குஜராத் பந்து வீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்க விட்டு அதிரடியில் மிரட்டினர். 27 பந்துகளில் அரைசதம் அடித்த டேரில் மிட்செல் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். நூர் அகமது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு அரைசதம் அடித்த மொயீன் அலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

GT vs CSK

சிறுது நேரம் அதிரடி காட்டிய ஷிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜடேஜாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய எம்.எஸ்.தோனி 26 ரன்கள் அடித்தார். முடிவில் சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி குஜராத் டைட்ட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக மொகித் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Trending News

Latest News

You May Like