1. Home
  2. தமிழ்நாடு

ஜி.எஸ்.டி. தொடர்பான மோசடி புகார்களை அமலாக்கத்துறை விசாரிக்க மத்திய அரசு அனுமதி..!

1

ஜி.எஸ்.டி. தொடர்பான மோசடி புகார்களை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி. யின் முழு அமைப்பையும் கொண்டு வந்துள்ளது. இதனால், இனி ஜி.எஸ்.டி.,தொடர்பான தகவல்கள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி பகிரப்படலாம்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில், ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை மத்திய அரசு இணைத்து உள்ளது.

ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவல் உள்ள பட்டியலில் 26 வது அமைப்பாகச் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவு அமைப்புகளின் விசாரணைக்கு தேவைப்பட்டால் ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அந்த தகவல்களை அவர்களிடம் அளிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. தாக்கல் செய்பவர் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் பற்றிய தகவல்களை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவு போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு ஜி.எஸ்.டி. குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like