1. Home
  2. தமிழ்நாடு

மத்திய நிதியமைச்சர் பதவி நீக்கம் செய்யக்கோரி கடிதம் எழுதிய ஜிஎஸ்டி துணை ஆணையர் பணியிடை நீக்கம்..!

1

சேலம் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணன் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 6 மாதம் கழித்து கடந்த 3-ம் தேதி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், பெரும் சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.

சாதியைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது பெரும் விவாதமாக மாறிய இந்த விவகாரத்தில், விவசாயிகளுக்கு அனுப்பப்பட்ட சம்மனை அமலாக்கத்துறை ரத்து செய்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்தார். இந்த சூழலில் அவரை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like