1. Home
  2. தமிழ்நாடு

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.. மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.. மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?


இந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பெரும் அடியை சந்தித்தது. அதேநேரத்தில் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டது.

மேலும் பல்வேறு காரணங்கள் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசால் விடுவிக்க முடியவில்லை.

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.. மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?

இந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் தான் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருந்தது. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை கண்டது.

இந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி எனும் மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. நடப்பு 2020 அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி ஜிஎஸ்டிஆா்-3பி படிவ கணக்குதாக்கல் செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.. மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?

நடப்பு 2020 அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூலான ரூ.1,05,155 கோடியில், சிஜிஎஸ்டி ரூ.19,193 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.5,411 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.52,540 கோடியாகவும், தீா்வை ரூ.8,011 கோடியாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.. மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?கடந்தாண்டு அக்டோபா் மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.95,379 கோடியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like