1. Home
  2. தமிழ்நாடு

“நள்ளிரவுக்குள் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படும்” : நிர்மலா சீதாராமன்!

“நள்ளிரவுக்குள் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படும்” : நிர்மலா சீதாராமன்!


இன்று நள்ளிரவுக்குள் இந்தாண்டு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

நடப்பாண்டு நிலுவைத் தொகையான 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும், மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையான 24 ஆயிரம் கோடி ரூபாய் அடுத்தவார இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like