#GST 2.0 : இன்று முதல் விலை குறையும், உயரும் பொருட்கள் என்னென்ன... முழு லீஸ்ட் இதோ..!
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகிறது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன:
- 5% – அத்தியாவசியப் பொருட்கள்
- 18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்
- 40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் கேமிங் போன்றவை)
இந்த சீர்திருத்தம் வரி கணக்கிடுவதை எளிமைப்படுத்துவதோடு, நுகர்வோர் விலையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எது மலிவு ஆகிறது?
- அத்தியாவசியப் பொருட்கள் (12% → 5%):
- பேஸ்ட், சோப்பு, ஷாம்பு
- பிஸ்கட், ஸ்நாக்ஸ், ஜூஸ் போன்ற பேக்கேஜ்டு உணவுப் பொருட்கள்
- நெய், கன்டென்ஸ்டு பால்
- மிதிவண்டிகள், எழுதுப்பொருட்கள்
- குறைந்த விலை ஆடைகள், காலணிகள்
- மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் (28% → 18%):
- ஏர் கண்டிஷனர்
- ஃப்ரிட்ஜ், டிஷ்வாஷர்
- பெரிய திரை டிவிகள்
- சிமெண்டு
- ஆட்டோமொபைல் துறை:
- சிறிய கார்கள் (எஞ்சின் 1200cc-க்கு குறைவாக) 28% இலிருந்து 18%க்கு குறையும்
- இருசக்கர வாகனங்களும் குறைந்த வரியில் வரும்
- பெரிய கார்கள், சொகுசு எஸ்யூவிகள் முந்தைய உயர் வரியிலேயே தொடரும்
- காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள்:
- தற்போதைய 18% வரி குறைக்கப்படவோ, சில பிரிவுகள் விலக்கு பெறவோ வாய்ப்பு உள்ளது.
எது விலை அதிகரிக்கிறது?
- புகையிலை பொருட்கள்
- மதுபானம்
- பான் மசாலா
- ஆன்லைன் பந்தயம், கேமிங் பிளாட்ஃபார்ம்கள்
மற்றவை:
- எரிபொருட்கள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அதன் விலையில் மாற்றமில்லை.
- வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் போன்ற ஆபரண பொருட்கள் முந்தைய வரியிலேயே தொடரும்.