குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதற்காக, தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது.
அதன்படி, ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.