1. Home
  2. தமிழ்நாடு

பா.ரஞ்சித்தின் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு!!

பா.ரஞ்சித்தின் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு!!


இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை விழா பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் பறை இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் என களைகட்டியது. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மக்களின் இசையையும், அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய கலைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பா.ரஞ்சித்தின் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு!!

துக்க நிகழ்வுகளுக்கு பாடப்படும் ஒப்பாரி பாடல் நிகழ்ச்சியின் முதல் பாடலாக இடம்பெற்றது. மதுரையைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் நையாண்டி மேளம், ராப் இசை பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வடசென்னயின் பாரம்பரிய இசையான கானா, ஹிப் ஹாப் ஆகிய பாடிய குழுவினர், அரங்கத்தையே அதிர வைத்தனர்.

எளிய மக்களின் நிலம் சார்ந்த வாழ்க்கை, பண்பாடு, போராட்டம் என பல சாராம்சங்கள் நிறைந்த பாடல்கள் மூலம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தை முன்னெடுப்பதே நோக்கம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like