பெரும் அதிர்ச்சி.. தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்.. அச்சத்தில் மக்கள் !

பெரும் அதிர்ச்சி.. தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்.. அச்சத்தில் மக்கள் !

பெரும் அதிர்ச்சி.. தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்.. அச்சத்தில் மக்கள் !
X

தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 120ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஒமைக்ரான் புகுந்தது.

airport

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான கொரோனா குறித்த மருத்துவத்துறை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

airport

தமிழகத்தில் ஏற்கனவே இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 115 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. எனினும் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 120 பேரில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


newstm.in

Next Story
Share it