1. Home
  2. தமிழ்நாடு

பெரிய எதிர்பார்ப்பு..! வரும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

Q

மத்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமயைிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மத்திய பட்ஜெட் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுவீச்சில் தயாராகி வருகிறார்.
அதன்படி கடந்த மாதம் (டிசம்பர்) 6ம் தேதி முதல் நேற்று வரை டெல்லியில் பல்வேறு துறை சார்ந்தவர்களை அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினர். ஒரு மாதமாக நடந்த இந்த ஆலோசனை என்பது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இவர்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த ஆலோசனையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் தொழிலாளர் சங்கமாகப் பாரதிய மஸ்தூர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் பவன் குமார் உள்ளிட்டவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like