2 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம்..!
மகாராஷ்டிரா அரசு சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்திற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அரசு தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் ஓய்வூதிய நிதித் திட்டங்களை நிர்வகிக்கும் சில வங்கிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எல்ஐசி மற்றும் வங்கிகள் தங்கள் முன்மொழிவைச் சமர்ப்பித்ததும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதை ஆய்வு செய்து, அமைச்சரவை ஒப்புதலுக்கான இறுதித் திட்டத்தைத் தயாரிக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.