வீடு புகுந்து மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. பக்கத்து வீட்டு இளைஞர்கள் வெறிச்செயல் !

வீடு புகுந்து மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. பக்கத்து வீட்டு இளைஞர்கள் வெறிச்செயல் !

வீடு புகுந்து மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. பக்கத்து வீட்டு இளைஞர்கள் வெறிச்செயல் !
X

திரிபுரா மாநிலத்தின், வடக்கு திரிபுராவில் பர்ஹால்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் இளைஞர்கள் இருவர் குடியிருந்து வந்துள்ளனர்.

இதனிடையே வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட இளைஞர்கள் இருவரும் உள்ளே புகுந்தனர். பின்னர் வலுகட்டாயமாக இருவரும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கோர சம்பவம் கடந்த 24 ஆம் தேதி நடந்துள்ளது.

இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் போது தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னரே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்மந்தபட்ட இளைஞர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it