மூதாட்டி அடித்துக்கொலை.. கணவன், மனைவி, மகன்கள் தலைமறைவு !
மூதாட்டி அடித்துக்கொலை.. கணவன், மனைவி, மகன்கள் தலைமறைவு !

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் சென்னிமலை - மல்லியம்மாள் என்ற வயதான தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தங்களது நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த தம்பதிக்கும், அவர்களது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்திற்கும் சில ஆண்டுகளாக நில பிரச்சினை இருந்து வருகிறது. இதனால், இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், இரவில் சென்னிமலை - கிருஷ்ணன் குடும்பங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியுள்ளது. கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும், மல்லியம்மாள் மற்றும் சென்னிமலையை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மல்லியம்மாள் அங்கேயே மயங்கி கிழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னிமலை, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மல்லியம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மல்லியம்மாள் மீது தாக்குதல் நடத்திய கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம் , மகன்கள் அசோகன், பொண்ணு வேல், விஜயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
newstm.in