1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Q

தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கடந்த 2 நாட்களாக தனியார் தொலைக்காட்சி மற்றும் அதன் சமூக வலைதளபக்கத்தில், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்குள் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தரவுகளாக வைத்து அதிமுக ஐ.டி. விங் உள்ளிட்ட எதிர்கட்சியினர் தேர்தலுக்குள் மக்கள் கட்டண உயர்வை மறந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டு பேருந்து கட்டண உயர்வு செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை டேக் செய்து விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like