அரசு பள்ளி மாணவர் மருத்துவ படிப்பு செலவை அரசே ஏற்கும்!
புதுச்சேரி சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் மருத்துவப் படிப்புச் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்பதையும் புதுவை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.