அமைச்சர் ஜெயக்குமாருக்கு கோவிட் சூப்பர் ஹீரோ விருது!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு, தொண்டு நிறுவனம் ஒன்று "சூப்பர் ஹீரோ" என்ற விருதை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதேவேளையில், மீன் வளத்துறை அமைச்சராக இருந்தாலும் கூட, கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமாரும் தனது பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரை கவுரப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள, மனிதம் காப்போம் என்ற ஒரு தொண்டு நிறுவனம் அவரை நேரில் சந்தித்து, "சூப்பர் ஹீரோ" விருது வழங்கியுள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் தனது உயிரையும் பாராது பணயம் வைத்து ஜெயக்குமார் செயல்பட்டாதல், "கொவிட் 19 - சூப்பர் ஹீரோ" விருது வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் பெருமை பொங்க தெரிவித்துள்ளது.
இதனால், வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் உலா வருகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.