வெங்காய ஏற்றுமதிக்கு குறைந்த பட்ச விலை வரம்பு ரத்து…!
வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலகளாவிய சந்தையில் அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு விற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, ஒரு டன் வெங்காயத்திற்கு குறைந்தபட்சமாக 550 அமெரிக்க டாலர் என விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகளின் கைகளில் பணம் செல்லும் வேகத்தை குறைத்தது. இந்த விலை வரம்பு நீக்கப்பட்டதன் மூலம், வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள், குறிப்பாக மகாராஷ்டிர மாநில விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வெங்காய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தலாம். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.