1. Home
  2. தமிழ்நாடு

GOVT SCHEME : கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்... யார் யாருக்கு கிடைக்கும்?

1

கறவை மாடு (Dairy Cows) வாங்குவதற்கான கடன் திட்டத்தையும் TABCEDCO செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு கடன் வழங்கப்படும், விதிமுறைகள் என்ன, தகுதிகள் என்ன, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து இங்கு காணலாம்.   

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் இந்த கடன் திட்டம் வழங்கப்டுகிறது.   பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு அதிகபட்சமாக ஒருவருக்கு எருமை உள்பட 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.   

இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும். ஆனால் இதில் பயனாளிகளின் பங்கு 5 சதவீதம்தான்.   இத்திட்டத்தின் கீழ் பயனடைய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கே தகுதியுள்ளது. இவர்களின் ஆண்டு வருமானமும் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.   

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 வயதினர் முதல் 60 வயதினர் வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.   

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் ஆகியவை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like