‘சிசிடிவி’ கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் 18 மாதம் சேமித்து வைக்க அரசாணை..!
தமிழகத்தில், காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘சிசிடிவி’ கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், முறையாக கண்காணிக்கப்படுவது இல்லை.
அந்த வகையில் தான், துாத்துக்குடியில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கிய காட்சிகள் சேமிக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. இருவரும் இறந்தும் விட்டனர்.
தற்போதும், காவல் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகும் காட்சிகளை, 30 – 40 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதை மாற்றி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 12 – 18 மாதங்கள் வரை சேமித்து வைக்கும் வகையில், உபகரணங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டு உள்ளது.