ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் சின்னங்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அந்நாட்டு நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உபயு இந்தியா, தி பிளாக் நிறுவனம் மற்றும் தி பிளாக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.