1. Home
  2. தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் துறைக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு..!

1

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டுவது கனவு மட்டுமல்ல அது அவர்களது லட்சியமும் கூட. இதற்காக அவர்கள் தங்களது வருமானத்தில் சிறு பகுதியை சேர்த்து கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அதாவது, வீடுகளை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் மத்திய அரசு வீட்டு வசதி திட்டத்தை கொண்டு வர போவதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.. வாடகை வீடுகள், குடிசை பகுதிகள் அல்லது அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு, சொந்த வீடுகளை வாங்கவும், கட்டவும் உதவும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று கூறியிருந்தார்.

எனினும், சிறு சேர்த்த பணத்தை கொண்டு, வீடு கட்டுவதற்காக, கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். ரியல் எஸ்டேட்தாரர்களும், வாடகை வீட்டுதாரர்களை புதிய வீட்டுமனை டெண்டருக்கு ஒப்புக்கொள்ள வைப்பதற்காக, வீடு கட்ட தேவைப்படும் வழக்கமான தொகையை விட 15 சதவீதம் குறைத்து சொல்கிறார்களாம். முடிவடையும்போது, ​​விலைகள் அதிகரித்து, பில்டர்கள் மற்றும் பயனாளிகள் இருவரையும் பாதிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.

பின் வீட்டுமனை வேலை முடியும் பொழுது அவ்வவ்போது ஏறும் கட்டுமான பொருட்களின் விலையால் பில்டர்கள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதனை ஈடுகட்ட வீட்டுக்காரர்களிடம் டெண்டரின் போது ஒப்புக் கொண்ட தொகையை விட கூடுதல் தொகையை வசூலிக்கிறார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர் புதிய அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதில் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் வீட்டுவசதி மற்றும் குறைந்த விலை வீட்டு திட்டங்களுக்கான டெண்டர்களின் போது விலையை குறைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.இந்த அறிவிப்பானது, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுமக்கள் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என்பதுடன், இரு தரப்பிற்கும் இணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

Trending News

Latest News

You May Like