வெயிலை சமாளிக்க அதிரடி உத்தரவு : இனி அரசு மருத்துவமனைகளில் இது கட்டாயம்..!

தமிழகத்தில் நாள்தோறும் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. இதனால் ஏப்ரல் தொடக்கத்திலேயே மக்கள் வெயிலால் அவதியடையத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது
வெயில் தாக்கம் அதிகரிப்பால் உடல் சோர்வடைந்து நீர்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக ஓஆர்எஸ் கரைசல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் பவுடரில் தண்ணீர் கலந்து ஓஆர்எஸ் கரைசல்கள் வைக்கப்பட்டுள்ளன. புற நோயாளிகள் பிரிவு, ஐசியு, மருத்தகங்கள் அருகில் இந்த கரைசல் வைக்கப்பட்டுள்ளது. இதனை குடிப்பதன் மூலம் சோர்வுடன் வரும் நோயாளிகளுக்கு புத்துணர்வு கிடக்கும். சுகாதாரத் துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல சென்னையின் பல இடங்களில் வாகன ஓட்டிகள் வசதிக்காக பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் சிக்னலில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து காணப்படுகிறது.மேலும் திமுக, அதிமுக என ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நாள்தோறும் குடிக்க மோர், இளநீர் ஆகியவை இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இ