சீன இறக்குமதி லைட்டரின் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடை..!
சீனாவின் சிகார் லைட்டர்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் இவற்றின் விற்பனையால் லட்சக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்தது.
சீன லைட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையை தடுக்கக் கோரி தேசிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் கோபால்சாமி தலைமையில் அதன் நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் தீப்பெட்டி தொழிலை பாதிக்கும் சீன லைட்டர் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது
பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிப்பு என கோவில்பட்டி, சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கை ஏற்று மதிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளனர்.