பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கு தடை: மத்திய அரசு..!

வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.