1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்..!

Q

மத்திய அரசுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிவாரண நிதியும், அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் மேலும் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பகவந்த் மான் தனது சமூக வலைதள பக்கத்தில், "விவசாயிகளின் போராட்டத்தின் போது, கனௌரி எல்லையில் பலியான சுப்கரன் சிங் (வயது 21) குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கப்படும். அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், சுப்கரன் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொலை வழக்கு
பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், ஹரியானா போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்றும், பிப். 26-ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம்; பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா அரசு எல்லையில் தடுத்து நிறுத்தி உள்ளது.
பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் புதன்கிழமை பேரணியைத் தொடங்கியபோது அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை ஹரியானா போலீஸாா் வீசினா்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தாா். 12 போலீஸாா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
விவசாயி உயிரிழப்பு தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், சம்யுக்த விவசாய கூட்டமைப்பின் தலைவா் பல்பீா் சிங் தெரிவித்தாா்.
பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, 30 டிராக்டா்களை ஹரியானா போலீஸாா் சேதப்படுத்திவிட்டனா் எனவும், இதுகுறித்து பஞ்சாப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மற்றொரு விவசாய சங்கத் தலைவா் ஸ்வரன் சிங் பாந்தா் தெரிவித்தாா்.
‘எக்ஸ்’ வலைத்தளம் மறுப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் 177 ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கங்களை முடக்க மத்திய அரசு அளித்த உத்தரவை ஏற்க எக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இது வெளிப்படைத்தன்மைக்கு அவசியமானது என்றும் அந்த நிறுவனம் பதிலளித்துள்ளது

Trending News

Latest News

You May Like