தீபாவளி பண்டிகையையொட்டி சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணம் இலவசம் - மத்திய அரசு..!
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியேறுவதால், சுங்கச்சாவடிகளில் கூட்டம் அதிகமாகவும், சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடிகளில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக ஸ்கேனர்களைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வாகனங்கள் செல்லும் திசையில் அதிக ஊழியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆயுதபூஜை விழாவின் போது, போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு, வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், தீபாவளி பண்டிகையின் போதும், கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், கட்டணத்தை விலக்கி, வாகனங்களை இலவசமாக அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.