1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

1

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதுவை அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது நேற்று அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like