ஏழு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி..!
சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 31- ஆம் தேதி முடிவடையவிருந்த நிலையில், அடுத்தாண்டு வரை அந்த கட்டுப்படும் நீடிக்கும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலம் இந்தியாவில் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், உள்நாட்டில் அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும், சில தளர்வுகள் அடிப்படையில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் மட்டும் குறிப்பிட்ட அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி நடைபெறும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியில் உலகில் முதலிடம் வகிக்கும் இந்தியா, அதன் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பொருட்களைப் போல சர்க்கரையை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அரசிடம் உரிமம் பெற்ற பின்னரே, சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், கினி, செலஸ் ஆகிய ஏழு நாடுகளுக்கு 10.34 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.