இந்த 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதி..!
வெங்காய தட்டுப்பாடு உள்நாட்டில் ஏற்படாமல் இருக்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இதையேற்ற மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
தற்போது இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ் ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டும் 99 ஆயிரத்து 500 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக மத்திய நுகர்வோர் மற்றும் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெங்காயத்தில் பெரும் பகுதி மஹாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 மாதங்கள் கழித்து 6 ஆண்டுகள் முந்த்ரா துறைமுகம், பிபாவாவ் துறைமுகம், ஜேஎன்பிடி துறைமுகம் வழியாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.