1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுக்கள் தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது : முதல்வர் ஸ்டாலின்..!

1

ஆளுநர் - திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில். ஆளுநர் ஆர்.என்.ரவி மீது 15 குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் விவரம்:

  • ஆர்.என்.ரவி வெளிப்படையாகத் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழக அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
  • சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
  • உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
  • ஆர்.என்.ரவி விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொது வெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது.
  • ஆளுநர் ஆர்.என். ரவியின் தேவையற்ற அறிக்கைகள், பேச்சுக்கள் தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.
  • தமிழக மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி, தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார்.
  • திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும்.
  • தமிழ்நாடு" என்ற பெயரை, "தமிழகம்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் ஆளுநர் தெரிவித்தார்.
  • முதலீடுகளை ஈர்க்க நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல ஆளுநர் குறிப்பிட்டார்.
  • சிதம்பரம் குழந்தைத் திருமணம் தொடர்பான ஆளுநரின் அறிக்கை காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது.
  • குற்றவியல் விசாரணைக்கு இடையூறாக ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள்.
  • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனது நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆர்.என்.ரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.
  • அரசியல் அமைப்பின் 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார்.
  • ஆர்.என்.ரவி, வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.
  • தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like