1. Home
  2. தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து இந்தாண்டும் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Q

தமிழக சட்டசபை கூடிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் தனது முழு உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்..
தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி உரையை முழுவதும் புறக்கணித்தார் ஆளுநர் ரவி. மேலும், தமிழக அரசு தனக்குத் தயார் செய்து தந்த உரையில் கூறப்பட்ட சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறி உரையை முடித்துக்கொண்டார். வெறும் சில நிமிடங்களில் ஆளுநர் தனது உரையை முடித்துக் கொண்டார்.
இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து இந்தாண்டும் பாதியிலேயே வெளியேறினார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து கிளம்பினார். முன்னதாக தமிழக அரசின் உரையை புறக்கணித்தது தொடர்பாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன் . அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என கூறினார்.

Trending News

Latest News

You May Like