டெல்லிக்கு 3 நாள் பயணமாக சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார்.
அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து 3 நாள் பயணமாக புதுடெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 22-ம் தேதி இரவு 8.15 மணியளவில் புதுடெல்லியில் இருந்து தனியார் பயணிகள் விமானம் மூலமாக மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 3 நாள் புதுடெல்லி பயணம், அவரது சொந்த பயணம் என்றும், இதில் வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை எனக் கூறப்படுகிறது.