ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு!!
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உள் விசாரணை குழுவிடமும் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு தன்னாட்சி நிறுவனம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆளுநரின் கீழ் இயங்கும் நிர்வாகத்தின் கடமை. அங்கு பாதுகாப்பு காவலர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களா அல்லது பணிக்கு ஆள் நியமிக்கப்பட்டது போல கணக்கு காண்பித்து இருக்கிறார்களா என்பதெல்லாம் குறித்து பல்கலைக்கழகம் தெளிவுபடுத்த வேண்டும்." எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.