1. Home
  2. தமிழ்நாடு

ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி..!

1

நாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஜெய்சுயா அறிவுசார் கல்வியகம் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் ஓவிய பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதில் பங்கேற்று மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து, அதில் இடம்பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஜெய்சுயா அறிவுசார் கல்வியக முதல்வர்  உதயமதி, பள்ளி தாளாளர்  ராமச்சந்திரன், முதல்வர்  லதா, தென்னிந்திய ஆய்வு மையத்தின் சென்னை பொறுப்பாளர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like