1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவத்துறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் !

மருத்துவத்துறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் !


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு உள் ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் வழங்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மருத்துவ கல்வி பயில நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்Jப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆளுநரை கண்டித்து திமுக சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று, மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனிடையே, இந்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like