அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்..! மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பாடப்புத்தகம்..!
கல்வியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் உருவாக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருநகர் என்ற பகுதியில் அரசு உதவிப்பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் மாணவர்களில் கல்வி கற்றை மேம்படுத்த அந்த பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து AI தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் தங்களது பாடத்தினை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக AI தொழில்நுட்ப ஆய்வகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வகத்தில் டிஜிட்டல் வசதியுடன் இயங்கக்கூடிய திர, ஏசி வசதி உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்த பள்ளியின் இயக்குநர் கூறியதாவது: தற்பொழுது அனைத்து துறைகளிலும் ஏ ஐ தொழில்நுட்பம் முதன்மை பெற்ற வருகிறது. இந்த சூழலில் மாணவர்களை காண கல்வி கற்றலை மேம்படுத்து ஏஎ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தும் இதற்காக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஏ ஐ பாட புத்தகத்தை உருவாக்கினர். இந்த புத்தகம் குறித்து மாணவர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் ஆய்வு செய்த பிறகு மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாணவர்கள் தவறான வழிகளில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக ஏ யைத் தொழில்நுட்பத்திலான பாட புத்தகத்தை உருவாக்கியுள்ளோம் என்று கூறினார். இந்தப் பாட புத்தகத்தில் வீடியோ மற்றும் ஆடியோ செயல்பாடுகள் மையப்படுத்தி கார்ட்டூன்கள் ஆக உருவாக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், வகுப்பறையில் மாணவர்களுக்கு கவன சிதைவு ஏற்படாத வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழக அரசு “அரசுப் பள்ளி நவீனமயாக்கல் திட்டம்” என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.இந்த முன்னோக்கிய திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 6,000-க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதே நேரத்தில், 2,000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் உருவாக்கப்படும். இது, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் கல்வி தரத்திலும் ஒரு புதிய திசையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)