1. Home
  2. தமிழ்நாடு

அசத்திய அரசு பள்ளி மாணவி..!திருக்குறள் வரிகளால் திருவள்ளுவரின் படம்..!

Q

தென்காசியை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தைத் தத்ரூபமாக வரைந்து அதற்குப் பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதித் தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.
மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களைக் கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டுமல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.

Trending News

Latest News

You May Like