அமராவதி அணையில் இருந்து 10-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவு..!

நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 190.08 மில்லியன் கன அடிக்கு மிகாமல் வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு வினாடிக்கு 440 கன அடி வீதம் பயிர்களை காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.