வெளியான அரசாணை..! தஞ்சாவூரில் வருகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்..!
இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடற்பசு இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடற்பசு இடங்களின் எண்ணிக்கை வாழ்விட இழப்பு காரணமாக மிகவும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தை தற்போது சுமார் 240 கடல் பசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையான கடற் பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இவற்றை பாதுகாக்க பாக் விரிகுடாவில் கடல் பசு பாதுகாப்பாக அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் கடல் பசு இனம் மற்றும் அதன் கடன் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விருது விழா கடற்ப பகுதியில் கடற்கரசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இதனை செயல்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த கடற்பசு மையத்தில் பொதுமக்களை முழுவதுமாக அனுமதிக்கும் பகுதி பகுதி அளவு அனுமதிக்கும் பகுதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என மூன்று பகுதியாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பசு வடிவிலான மையம் 4 டி அரங்கம் அருங்காட்சியகம் திறந்தவெளி அரங்கம் பூங்கா உணவகம் செல்பி பாயிண்ட் குடிநீர் வசதி மிகப்பெரிய அளவிலான முகப்பு பகுதி வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளும் இந்த மையத்தில் இடம் பெற உள்ளன. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடா கடல் பகுதியில் இந்த கடற்பசு பாதுகாப்பு மையம் 448 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.