அரசு அதிகாரியின் கொடூர முகம்.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (54). இவர் சென்னை ஆலந்தூரில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருகிறார்.
இவர் வெள்ளவேடு அருகேயுள்ள மேல்மனம்பேடு கிராமத்தில் வாடகை வீட்டில் சுரேஷ் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பணத்தாசை காட்டி அதாவது 500 ரூபாய் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சுரேஷை தட்டிகேட்டனர். அப்போது பணத்தை காட்டி ஆபாசமாக பேசியதாகவும், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு சுரேஷ் பாலியல் தொல்லை அளித்ததை உறுப்படுத்தினர். இதனையடுத்து அரசு அதிகாரியான சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கைதான அதிகாரி சுரேஷை 15 நாள் காவலில் வைக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in